Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 02 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த)
கிளிநொச்சி மாவட்டத்தில் ஐம்பதாயிரம் மரங்களை நடுகை செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆண்டு பருவகால மழையின் போதான சூழலை ஒட்டியும், பச்சைமாத நிகழ்வையொட்டியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2ஆவது தவணைக்கால பதவியேற்பு நிகழ்வையொட்டியும் இந்த மரநடுகை நிகழ்வு செயற்படுத்தப்படவுள்ளது.
நாடுதழுவிய ரீதியில் தேசிய மரநடுகைத் திட்டத்தை முன்னிட்டு நடக்கவுள்ள இந்த மரநடுகைத் திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பளை, கண்டாவளை, கரைச்சி, பூநகரி ஆகிய பிரதேசங்களில் மரங்கள் நடுகைசெய்யப்படவுள்ளன. இது தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பளை, கரைச்சி, கண்டாவளை, பூநகரி பிரதேச செயலர்களும், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் (தலைமைப்பீடம்) கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், பச்சிலைப்பள்ளி, பூநகரி, கரைச்சி ஆகிய பிரதேச சபைகளின் செயலர்கள், வனஇலாகா திணைக்கள அதிகாரிகள், மற்றும் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
பிரதேச மண் வளத்திற்கும், சூழல்நிலைக்கும் பொருத்தமான மரங்கள் தொடர்பாகவும் இந்த மரங்களை நடுகை செய்யும் முறைமை மற்றும் ஒழுங்கு தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது. ஒக்டோபர் 15 – நவம்பர் 15 வரையான காலப்பகுதியை மையமாக வைத்து மரநடுகை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த மரநடுகைத்திட்டத்தில் பொதுமக்களையும், சமூக அமைப்புக்களையும் ஈடுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்தக் காலப்பகுதியில 'ஜாதிக சதிய' வினால் செயற்படுத்தப்படும் 'கமநெகும' திட்டத்தின் கீழ் கிராம மட்டத்திலான சிரமதானப் பணிகளை முன்னெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
01 Jul 2025