2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

திருட்டுச் சந்தேகத்தில் கொக்குவிலில் ஒருவர் பொலிஸாரால் கைது

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தமிழ்வேந்தன்)

யாழ். கொக்குவில் மேற்குப் பகுதியில் கடை ஒன்றை உடைத்துத் திருடினார் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ். பொலிஸாரால் இன்று காலை 8.30 மணியளவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது:

இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ். கொக்குவில் மேற்குப் பகுதியில் புகையிரத நிலைய வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு பொருள்கள் களவாடப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் குறித்த வர்த்தக நிலையத்துக்கு அண்மையாகவுள்ள ஒருவர் மீதும் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த நபரைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவரிடம் இருந்து ஒரு தொகை பொருள்களை மீட்டுள்ளதாகவும் திருட்டுப்போன பொருள்கள் முழுமையாக மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .