2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

வடமராட்சி வலயப் பாடசாலை ஆசிரியர்களுக்கான நட்பு உதவியாளர் பயிற்சி

Kogilavani   / 2010 நவம்பர் 12 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கர்ணன்)

ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஜி.ரி.இசெட்) அனுசரனையுடன் வடமாராட்சி வலயப்பாடசாலைகளிலுள்ள வழிகாட்டலும், ஆலோசனையும் ஆசிரியர்களுக்கான நட்பு உதவியாளர் பயிற்சி நெறி வகுப்பு நடத்தப்படவுள்ளது.


இப்பயிற்சிநெறி, புலோலி மெதஸ்டித மிசன் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில், எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து ஐந்து தினங்கள் காலை 8.30 மணிமுதல்  மாலை 4.30 மணிவரை  நடைபெறவுள்ளது.

வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் நடைபெறும் இப்பயிற்சி  நெறிக்கு இதுவரை நட்பு உதவியாளர் பயிற்சி பெறாத வழிகாட்டலும், ஆலோசனையும் பொறுப்பாசிரியர்களும், முதல் நியமனம் பெற்று பத்து வருடத்திற்குட்பட்ட சேவைக்காலம் உடைய ஆசிரியர் ஒருவரும்  கலந்து கொள்ளலாம் என வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் வ.செல்வராசா தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .