2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

யாழில் இசை விழா; சர்வதேசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு: மஹிந்த ஹத்துருசிங்க

Menaka Mookandi   / 2011 மார்ச் 25 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

'யாழ்ப்பாண இசை விழா 2011' இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுவதானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதற்கான ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

இசை விழாவினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'வடக்கு கிழக்கு மக்கள் உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த கலாசார நிகழ்வுகள் ஒரே மேடையில் மேடையேற்றப்படுகின்றமை மிகவும் சிறப்பானதாகும்.

நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ள நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்போது இயல்பு வாழ்க்கையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இதுவொரு மாறுதலாக இருக்கும்.

சர்வதேச ரீதியில் பிரசித்தி பெற்ற பல்வேறு கலாசார நிகழ்வுகும் இங்கு மேடையேற்றப்படுவதால் நாம் சர்வதேசத்தின் பார்வையில் மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளோம். Pix By :- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .