2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

குடிசன மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுக்கும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புக்கள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 30 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கையில் நடைபெறவுள்ள குடிசன மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக  யாழ். மாவட்ட அரசாங்க அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்கள் உட்பட இப்பணியுடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளுக்கும் இந்த பயிற்சி வகுப்புக்கள் யாழ்ப்பாணம் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று முதல் மூன்று நாட்களுக்கு யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலுள்ள கிராம அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

நாளையதினம் கிராம அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நிறைவுபெறுவதுடன், உடனடியாக கிராம அலுவலர்கள் தமது பகுதிகளில் வீடுகள் கட்டிடங்களை நிரற்படுத்துவதுடன் குடியிருப்புகள் மற்றும் இடங்களில்  வாழும் மக்களின் விபரங்களையும் சேகரிக்கவுள்ளனர்.

கடந்த முப்பது வருட கால இடைவெளியின் பின்னர் அகில இலங்கை மட்டத்தில் நடைபெறவுள் குடிசன மதிப்பீட்டுப் பணிகள் வடக்கு, கிழக்கிலும்  நடைபெறுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .