2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

வேலையற்ற இளைஞர், யுவதிகளின் விபரம் திரட்டல்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் படித்து விட்டு வேலையற்றிருக்கும் இளைஞர், யுவதிகள் தொடர்பான விபரங்கள் கிராம அலுவலர்களினால் திரட்டப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நல்லூரிலுள்ள கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்,; யுவதிகளின் முழுப் பெயர், முகவரி, குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வித் தகைமைகள் பதியப்பட்டு வருகின்றன.

இதுவரையில் பதிவுகளை மேற்கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்ட நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் தமது கிராம அலுவலருடன் தொடர்புகொண்டு உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு நல்லூர் பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X