2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

வரலாற்று தவறுகள் இடம்பெறுவதை யாராலும் தடுக்க முடியாது: வடமாகாண கடற்றொழில் சமாச தலைவர்

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நாம் விடுக்கும் அவலக்குரலை இலங்கை, இந்திய அரசுகள் செவிமடுக்கத் தவறின் வரலாற்றுத் தவறுகள் இடம்பெறுவதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது என வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்துள்ளார்.

இலங்கை - இந்திய மீனவர்கள் தெடர்பில் அண்மையில் புதுடில்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு வடமாகாண கடற்றொழில் சமசப் பிரதிநிதிகளுக்கு எந்தவிதமான அழைப்பும் விடுக்கப்படவில்லை என்பதுடன் மாநாட்டில்; எடுக்கப்பட்ட முடிவுகள் கூட எமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் எஸ்.தவரெடணம் கவலை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நல்லெண்ணத்தில் காத்து இருந்தோம். இதுவரை உரிய தரப்புக்களினால் எந்தவித உறுதிமொழிகளோ ஆறுதலான முடிவுகளோ எமக்கு கிடைக்காமை மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.

எமது கடல் வளங்களை இழந்துபோய் அநாதரவாக இருக்கும் வடபகுதி மக்களுக்கு இதுவரை எந்தவித விமோசனமும் கிடைக்கவில்லை. அத்தோடு இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் வடகடலில் தொடர்ந்தவண்ணம்தான் இருக்கின்றன.

எமது கடல் வளங்களை நாம் இனியும் இழக்கத் தயார் இல்லை. எமக்குரியதை நாம் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டோம். இந்திய மீனவர்களை இந்திய வடகடலுக்குள் அத்துமீறி வருவதை தடைசெய்யாதுவிட்டால் நாம் தடைசெய்வாற்கான வழிகளை யோசிக்கவேண்டிவரும்.

பொறுமை இழந்துபோய் இருக்கின்றோம். மீண்டும் எமது பொறுமைகளை சோதனைக்கு உட்படுத்த வேண்டாம். அறுதியாகவும் இறுதியாகவும் நாம் விடுக்கும் அவலக்குரலை இலங்கை, இந்திய அரசுகள் செவிமடுக்கத் தவறின் வரலாற்றுத் தவறுகள் இடம்பெறுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .