2021 ஜூன் 24, வியாழக்கிழமை

யாழ். முஸ்லிம்களுக்கு பல அபிவிருத்தித் திட்டங்கள்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பொம்மைவெளியில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களுக்கான பல அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கின் வசந்தம் விசேட திட்டத்தின் கீழும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நிதியொதுக்கீட்டிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாநகரசபையின் உறுப்பினர் அஹமது சுல்தான் சுபியான் தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 4 கோடி 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி யாழ். முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகளான குடிநீர், மலசலகூடம், புதிய சந்தை, வீதிகள் என்பன புனரமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

அத்துடன், ஒஸ்மானியாக் கல்லூரியின் மஹ்மூத் மண்டபம் உட்பட சகல வகுப்பறைகளும்  சீரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .