2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

தமிழ்மொழிப் பாட ஆசிரியர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கல்வி வலயப் பாடசாலைகளில் தரம் 6இல் தமிழ்மொழிப் பாடத்தைக் கற்பிக்கின்ற சகல ஆசிரியர்களுக்குமான விசேட பயிற்சி செயலமர்வு இந்த மாதம்  நடைபெறவுள்ளதாக யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

யாழ். கோட்டப் பாடசாலை ஆசிரியர்களுக்கு இந்த மாதம்  11ஆம் திகதியும் நல்லூர் கோட்டப் பாடசாலை ஆசிரியர்களுக்கு இந்த மாதம் 15ஆம் திகதியும் கோப்பாய் கோட்டப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 18ஆம் திகதியும் செங்குந்த இந்துக் கல்லூரியில் மேற்படி பயிற்சி செயலமர்வு  காலை 8மணி முதல் மாலை 4.45 மணிவரை நடைபெறவுள்ளது.

யாழ். வலயப் பாடசாலைகளில் தரம் 6இல் தமிழ்மொழிப் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மேற்படி செயலமர்வில் தவறாது பங்குபற்றவேண்டுமென யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அ. வேதநாயகம் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .