2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

சாவகச்சேரி பெண் படுகொலையுடன் தொடர்பான மற்றொரு சந்தேகநபர் கொழும்பில் கைது

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

சாவகச்சேரி, மீசாலையில் கடந்த மாதம் குடும்பப்பெண்ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கொழும்பில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மீசாலை, வெள்ளை மாவடிப் பிள்ளையார் கோவில் வீதியிலிருந்து மார்ச் மாதம் 6ஆம் திகதி மீசாலை கிழக்கைச் சேர்ந்த குகதாசன் சாந்தினி வயது 38 என்ற குடும்பப்பெண்ணை இவரது விவாகரத்துப் பெற்ற கணவன் உட்பட 4 பேர் குறித்த பெண்ணை வெள்ளை வானில் கடத்தி கொலை செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததை  அடுத்து கணவன் உட்பட மூவரைக் கைது செய்தனர். குறித்த கணவன் கனடாவில் தங்கியிருந்து இப்பெண்ணை விவாகரத்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட சிவகுமார் பிரசன்னா என்ற நபர் இன்று சாவகச்சேரி பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.

இதனை விசாரணை செய்த பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை சாவகச்சேரி நீதவான் விடுமுறையில் சென்ற நிலையில் குறித்த சந்தேகநபரை இம்மாதம் 12ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க பொலிசாருக்கு உத்தரவிட்டார். குறித்த சந்தேக நபர் தொடர்பாக சட்டத்தரணி ப.கோனேஸ்வரன் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .