2021 ஜூன் 14, திங்கட்கிழமை

அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் இணைந்து புதிய அமைப்பு

Thipaan   / 2015 ஜனவரி 29 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது இலங்கையின் பல்வேறு முகாம்களிலும் சிறைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள - வடமாகாணத்தைச் சேர்ந்த - அரசியல் கைதிகளினதும் உறவினர்கள் இன்று வியாழக்கிழமை (29) யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி, 'தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர் ஒன்றியம் - வடமாகாணம்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்கள்.

இந்த அமைப்பின் தலைவராக கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி செல்லையா பவளவள்ளி (தொலைபேசி இலக்கம் 0774823465), செயலாளராக கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லன் விஜயகுமார் (தொலைபேசி இலக்கம் 0771838542) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பதினொரு பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் தெரிவுசெய்யப்பட்டது.

தற்போதைய புதிய அரசியல் சூழலில்  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பல தரப்புடனும் ஊடாடி, அதனை விரைவுபடுத்துவதற்கான வழிவகைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

வடமாகாணத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகளின்  பெற்றோரும் உறவினர்களும் தங்களுடன் தொடர்புகொண்டு இந்தக் கட்டமைப்பில் இணைந்துகொள்ளவேண்டும் என ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .