Super User / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடா நாட்டில் இராணுவத்தினரது வீதி சோதனை நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முதல் இரவு 9 மணிக்கு பின்னரும் நீடிப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல தரப்பினராலும் இராணுவத்தினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாகவே யாழ். குடா நாட்டில் இரவு 9 மணிக்கு பின்னரும் இராணுவத்தினரது சோதனை நடவடிக்கைதொடரும் என அவர் அறிவித்துள்ளார்.
இதுவரை காலமும் இரவு 6 மணி முதல் இரவு 8 மணி வரையே இராணுவத்தினரது வீதி சோதனைகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .