2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அக்கராயன் குடிநீர் வழங்கலை விரைவுபடுத்தவும்

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் குடிநீர் வழங்கலை விரைவுபடுத்துமாறு அக்கராயன் மத்தி, மேற்கு மற்றும் கங்காதரன் குடியிருப்பு ஆகிய கிராமங்களின் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் திங்கட்கிழமை (21) கோரிக்கை விடுத்துள்ளன.

ஆறு மாதத்தில் குடிநீர் வழங்குவோம் எனக் கூறப்பட்டு, நீர் வழங்கல் வடிகாலமைப்பினால் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குடிநீர்த் திட்ட வேலைகள் தற்போது மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும் குடிநீர் வழங்காத நிலையில் வேலைகள் மந்தகதியில் நடைபெறுகின்றன.

குடிநீருக்காக உருவாக்கப்பட்ட கிணறு மக்கள் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் குடிநீர்த் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதன் காரணமாகவே ஆறு மாதத்தில் குடிநீர் வழங்குவோமென தொடங்கப்பட்ட வேலைகள் முடிவடையாமலுள்ளதாக அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதன் காரணமாக அக்கராயன் மகா வித்தியாலயம், அக்கராயன் ஆரம்ப வித்தியாலய மாணவர்களும் அக்கராயன் மத்தி, கெங்காதரன் குடியிருப்பு, அக்கராயன் மேற்கு மக்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பாக ஜூன், ஜூலை மாதங்களில் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

எனவே, குடிநீர்த்திட்ட வேலையினை விரைவாக நிறைவுசெய்து குடிநீர் வழங்கலை விரைவுபடுத்த மாவட்டச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X