2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அக்கராயனில் மேம்பாலம் அமையுங்கள்

Gavitha   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயனில் மேம்பாலத்தை அமைத்துத் தருமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்திடம், அக்கராயன் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறுபோக நெற்செய்கைக் கூட்டத்தை நடத்துவதற்காக அக்கராயனுக்கு வருகை தந்த மாவட்டச் செயலாளரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அக்கராயன்குளம் வான் பாய்கின்றபோது, அக்கராயன் திருமுறிகண்டி வீதியில் அமைந்துள்ள தாழ்வான பாலத்தினால் வெள்ளம் மூடிப்பாய்வதன் காரணமாக போக்குவரத்துகள் துண்டிக்கப்படுகின்றது. இதனால், அக்கராயன் பிரதேச மருத்துவமனையின் நோயாளர் வண்டி கிளிநொச்சி பொது மருத்துவமனைக்குச் செல்லமுடியாத நிலையில் மாற்றுவழியினை நாடவேண்டியுள்ளதாகவும்; மக்கள் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன்,
'அக்கராயன் குளத்திலிருந்து 07 அங்குலம் நீர் வெளியேறினால்,  குறித்த பாலம் வழியாக போக்குவரத்தில் ஈடுபட முடியாது. தற்போதுள்ள பாலம் மழை காலத்தில் போக்குவரத்துக்கு உகந்தல்ல. குளத்தின் வெள்ளம் பாலத்தினை மூடிப்பாயும். எனவே பாலம் மேம்பாலமாக அமைக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள இடர் மிகுந்த பகுதியாக குறித்த பாலப்பகுதி கிளிநொச்சி மாவட்ட இடர்முகாமைத்துவப் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X