Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியிலுள்ள இரும்பகம் ஒன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட ஆவா குழு என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட இருவருக்கு தலா 6 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று (03) தீர்ப்பளித்தார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் உள்ள இரும்பகம் (ஹாட்வெயார்) ஒன்றின் மீது கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி மாலை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.
தாக்குதலையடுத்து 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் பொலிஸாரால் தேடப்பட்டவர்களில் ஒருவர், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்தார். பின்னர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டதுடன், மேலும் ஒருவரை அடையாளம் காணமுடியவில்லை என்று நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.
சில மாதங்களின் பின்னர் சந்தேகநபர்கள் அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 9 பேருக்கும் எதிராக பொலிஸார் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
எனினும் 9 சந்தேகநபர்களில் 4 பேர் மட்டும் நேற்று (03) நீதிமன்றில் முன்னிலையாகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் இருவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதுடன் ஏனைய இருவர் குற்றச்சாட்டை நிராகரித்து நிரபராதிகள் என்று மன்றுரைத்தனர்.
குற்றத்தை ஏற்றுக்கொண்ட இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் தலா 3 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்து நீதிவான் தண்டனைத் தீர்ப்பளித்தார்.
ஏனைய 7 சந்தேகநபர்களில் ஒருவரை விடுவிக்க அனுமதியளித்த நீதிவான் மிகுதி ஆறு பேரின் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
மேலும் மன்றில் முன்னிலையாகத் தவறியோருக்கு திறந்த பிடியாணை உத்தரவை வழங்கிய நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், அவர்களை உடனடியாகக் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு பொலிஸாரை அறிவுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .