2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அதிபரை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

க. அகரன்   / 2019 ஜனவரி 28 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வடக்கு வலயத்துக்குட்பட்ட சின்ன அடம்பன் பாரதி வித்தியாலயத்துக்கு அதிபர் இன்மையால்  கல்விசார் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்து பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை இன்று (28) முன்னெடுத்தனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வடக்கு கல்வி வலயத்தில் இருந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தனர். இதன்போது எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் புதிய அதிபர் ஒருவரை நியமித்து தருவதாக உறுதி மொழி வழங்கபட்ட பின்னர் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர்கள் “பாடசாலையில் கட்சிகள் வேண்டாம், கட்டடங்கள் கட்டப்பட்டது அழகுக்காக இல்லை,” போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X