Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவி மீது குறித்த பாடசாலை அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது நேற்று முன்தினம் கடந்த புதன்கிழமை (16) பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில், படுகாயமடைந்த மாணவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,
“பாடசாலையில் வகுப்பறையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் பணத்தைக் காணவில்லையென தெரிவித்து எனது பிள்ளையை அதிபர் தனது அறையில் கட்டி வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார். ஆனால் இதுவரையில் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் உள்ளன. எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென” தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .