2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

அனந்திக்கு எதிராக தமிழரசுக்கட்சி நடவடிக்கை

Editorial   / 2017 ஜூலை 02 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மீது, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக் கூட்டத்தில், இளைஞர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, தமிழரசுக் கட்சியின் தலைமை கூறியிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

 யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின், இளைஞர் அணி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று  (02)  நடைபெற்றிருந்தது. இந்தக் கலந்துரையாடலிலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X