2025 மே 17, சனிக்கிழமை

’அபிவிருத்தியால் அரசியல் விஸ்திர தன்மையை உறுதிப்படுத்த முடியாது’

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

தமிழ் மக்களின் சொத்துகள் அழிக்கப்படுவது மீள நடக்காமல் இருப்பதற்கு இந்த நாட்டில் அரசியல் விஸ்திரதன்மை உருவாக்க வேண்டுமென்றும், வெறும் பௌதீக அபிவிருத்தியால், அரசியல் விஸ்திர தன்மையை உறுதிப்படுத்த முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்ட தளங்களை பிரதமர், அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் மீள அமைப்பது யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, இலங்கையில் வாழும் மக்களுக்கு முக்கிய செய்தியை தெரிவிக்கின்றதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீள நடக்காது என்பதனை எடுத்துக் காட்டுவதாக தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபைக்கான புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (07) நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் யாழ்.மாநகர சபை எவ்வாறு அழியப்பட்டதென்பது வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒரு விடயம். நூலகம் ஒரு இரவில் தீக்கிரையானது, ஆத கடந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் போது, பிரதமர் அமைச்சரவையில் இருந்த போது, அவருடைய சகாக்களினால் தீக்கிரையாக்கப்பட்டது. ஆனால், மாநகர சபை ஆனது, நீண்டகாலமாக, இலங்கை இராணுவத்தினால், அண்மையில் உள்ள கோட்டையில் இருந்து செல் அடித்து தகர்த்தப்பட்டது எனவும், சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

இவ்வாறு அழிக்கப்பட்ட இரு தளங்களையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து, மீள அமைப்பது வடபகுதியில் உள்ள அதாவது யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு முக்கியமான செய்தி.
அந்த செய்தி என்னவெனில், இனிமேலும் இந்த சம்பவங்கள் நிகழாது, நாங்களாகவே, எமது கைகளினால் கட்டுகின்றோம் என்பதாகும் எனவும், அவர் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமை இருப்பதற்கு, இந்த நாட்டில், அரசியல் விஸ்திரதன்மை இருக்க வேண்டும். வெறும் பௌதீக அபிவிருத்தி அதனை உறுதிப்படுத்தாது. அதற்கான முன்னெடுப்புகளும் செய்யப்படுகின்றன. அவை உறுதி செய்யப்படவில்லை.

பின்னடிக்காது முன்னெடுக்கப்பட வேண்டும். எமது மக்களினால் கொன்று குவிக்கப்படாத எமது சொத்துகளை சேதப்படுத்தாதவர்களாக, தமிழ் மக்கள் தனித்து வாழ்வதற்கான அரசியல் அத்திவாரம் போடப்பட வேண்டும். அதனை இந்த முக்கிய தருணத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

யாழ்ப்பாணம் தமிழ் மக்களின் கலாசாரம் எந்தளவுக்கு முக்கியமானதென்பதனை பிரதமர் நன்கு அறிவார். ஆகையால், இந்தப் பகுதியில் ஏற்படும் அபிவிருத்திப் பணிகளுக்கு, பிரதமர் விசேட முக்கியத்துவம் கொடுப்பதனை மெச்ச வேண்டும். அதற்கு நன்றி செலுத்த வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .