2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அமரர் தர்மலிங்கத்தின் 31ஆவது நினைவுதினம்

George   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

1960ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக, உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றிய விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 31ஆம் ஆண்டு நினைவுதினம், இன்று வெள்ளிக்கிழமை (02) காலை 7 மணிக்கு, யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நினைவுக் கூட்டமும் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான   இரா.சம்பந்தன், அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X