2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சுப் பதவியை நிராகரித்தார் சிவாஜி

Editorial   / 2017 ஜூன் 29 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

வட மாகாண அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்துள்ளார். 

மேற்படி விடயம் குறித்து, யாழ். ஊடக அமையத்தில், நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், 

“கடந்த 14ஆம் திகதிக்கு முன்னதாகவே, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் என்னை அழைத்து அமைச்சு பொறு ப்புக்களை ஏற்க முடியுமா? என கேட்டிருந்தார். அதன் பின்னரும் கேட்டார். ஆனால் அந்த கோரிக்கைக்கு நான் பதில் வழங்கியிருக்கிறேன். 

அதாவது நிராகரித்துள்ளேன். காரணம், நாம் ஏற்பது மற்றவர்களுக்கு தடையாக இருக்க கூடாது என்பதற்காகவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுவிட்டு நாங்கள் 1 மாதம், 2 மாதம் என கொழும்பில் சென்று நிற்க இயலாது. 

முதலமைச்சர் கேட்டதில் தவறில்லை. ஆனால் அவருக்கு நான் தெளிவாகக் கூறியுள்ளேன். மேலும் முதலமைச்ச ர் கேட்கும்போதே, நீங்கள் நாடாளுமன்றில் இருந்தவர். அதற்குமேல் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக இருந்தவர். மேலும் எதையும் செய்யக் கூடியவர். ஆகவே அமைச்சுப் பொறுப்பு ஒன்றை பொறுப்பேறுங்கள் என்றே கேட்டார். 

ஆனால், நான் அதனை மறுத்தேன். மேலும், இங்குள்ளவர்களை விட தென்னிலங்கை ஊடகங்கள் தினம் கேட்கிறார்கள் அவர்கள் பயப்படுகிறார்களோ என்னவோ தெரியவில்லை. ஒருவேளை சிவாஜிலிங்கத்துக்கு அமைச்சு பதவி கிடைத்தில் பலம் கூடிவிடும் என நினைக்கிறார்களோ தெரியவில்லை” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X