Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 21 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
“வடமாகாண ஆளுநராக பதவியேற்று 41 நாட்களில் 100 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளை தாம் சந்தித்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தங்களுடைய நலன் சார்ந்த விடயங்களை மட்டுமே தம்மிடம் கேட்பதாகவும், மக்களுடைய நலன்சார் விடயங்களை அவர்கள் கேட்டதில்லை” எனவும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியுள்ளார்.
வடமாகாண உள்ளுராட்சி அமைச்சு கேட்போர் கூடத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எம்மைச் சந்திக்க வரும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை கூறுகிறார்கள்.
குறிப்பாக காணிப் பிணக்குகள், இராணுவ வசம் உள்ள காணிகள், காணி அற்றவர்களுடைய பிரச்சினைகள், போன்றன வடக்கில் பாரிய பிரச்சினைகளாக இருக்கின்றது. மேலும் இடமாற்றம் சம்மந்தமான பிரச்சினைகளும் அதிகம் இருக்கின்றது. எல்லோருக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து பணியாற்றவே அதிகம் விருப்பமாக இருக்கின்றது.
அந்த விடயம் தொடர்பாக நாங்கள் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கின்றோம்.
அதேபோல் வேலையற்ற பட்டதாரிகளுகளுடைய பிரச்சினையும் இருக்கின்றது.
அவர்களுக்கு நாங்கள் நிச்சயமாக வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும். அதற்காக அவர்களிடம் அணுகி விவசாயம் உள்ளிட்ட சுயதொழில் வேலைவாய்ப்புக்களை தருவதாகக் கேட்டோம். அவர்கள் அதற்கு மறுத்துள்ளார்கள். காரணம் அவர்கள் பட்டதாரிகள்.
மேலும் வடமாகாண ஆளுநராக பதவியேற்று 41 நாட்கள் நிறைவடையும் நிலையில் 4 பொதுமக்கள் சந்திப்புக்களை நடாத்தி அவற்றில் 1000 ற்கும் மேற்பட்ட மக்களை சந்தித்திருக்கிறேன். அதேபோல் 100 ற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிறேன்.
இதில் 100 ற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் என்னை சந்தித்த போதும், அவர்கள் யாரும் தமிழ் மக்களுடைய நலன் சார்ந்த விடயங்களை என்னிடம் கேட்கவில்லை. மாறாக அவர்கள் தங்களுடைய தேவைகளையும் தங்கள் நலன் சார்ந்த விடயங்களையுமே கேட்டிருக்கின்றார்கள். அவ்வாறான நிலையே இங்கே இருந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago