Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன், ரொமேஸ் மதுசங்க
வடக்கு மாகாணத்திலுள்ளவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வயது எல்லையை 40ஆக உயர்த்துவதற்கு அனுமதியளித்துள்ளதாக அம்மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் மக்கள் சந்திப்புக்காக வருபவர்களில் அதிகளவானோர், தங்களின் வாழ்வாதாரப் பின்னடைவு மற்றும் நியமனங்கள் வேண்டியே வருகின்றனர். குறிப்பாக வேலையில்லாப் பட்டதாரிகள், ஏற்றவேலையில் நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்வதற்கு அரச சேவைக்கு உள்வாங்கும் வயது எல்லையை தாம் நெருங்கிவிட்டதால், எதிர்காலத்தில் தமது நிரந்தர நியமனம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறினர்.
நிரந்தர நியமனத்திலுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வடமாகாணத்தில் அரச சேவைக்கு உள்வாங்கும் வயது எல்லையை 40ஆக உயர்த்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளேன். இதன் மூலம் வடக்கு இளம் சமூகத்தினர் பயனடைய முடியும்.
இங்கு தொண்டர் ஆசிரியர் நியமனம், ஒப்பந்த அடிப்படையிலான நியமனம், பகுதிநேர நியமனம் என ஆசிரியர் நியமனம் என்பது மூன்று கட்டங்களாக காணப்படுகிறது. இந்த ஆசிரியர் நியமனத்திலுள்ள நிரந்தர நியமனம் வழங்கல் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசுடன் கதைத்துள்ளேன். அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு அங்கிகாரம் கிடைத்தவுடன் தீர்வு எட்டப்படும்' என்றார்.
1 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago