2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் யாழில் 158பேர் கருத்து தெரிவிப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக மக்கள் கருத்துக் கேட்கும் குழுவின் யாழ்ப்பாண அமர்வில் 158 பேர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.

மக்கள் கருத்துக்கேட்கும் அமர்வு 15, 16 ஆகிய திகதிகளில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, அரசியலமைப்பு மறுசீரமைப்பில் எவ்வகையான மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும், எவை உள்ளடக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

'நாட்டில் இதுவரையில் பல தடவைகள் அரசியல் சீர்திருத்தம் செய்யப்பட்டன. இந்தச் சீர்திருத்தங்களின் போது, தமிழ் மக்கள், தமிழ் தலைவர்களின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. முதன்முறையாக தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்கும் இந்தச் சீர்திருத்தத்தை வரவேற்கின்றோம்.

இதுவரையில் 13 மாவட்டங்களில் இந்த அமர்வு நடத்தப்பட்டுள்ளது. யாழ்;ப்பாணத்தில் பல புதிய அனுபவங்கள் கிடைத்தன. பலர் புதிய விடயங்களை எடுத்துக்கூறுயிருக்கின்றனர். பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல புது கருத்துக்களை முன்வைத்தனர். 4 அரசியல் கட்சிகள் உள்ளிட்ட 158 பேர் யாழ்ப்பாணத்தில் தமது கருத்துக்களை முன்வைத்தனர்' என்றார்.

அத்துடன், பொதுமக்களால் வழங்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதன் செயற்பாடுகள் ஏப்ரல் மாதம் 2ஆம் வாரத்துக்குள் நிறைவடையும் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X