Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
அரியாலை கிழக்குப் பிரதேசத்தில், திண்மக் கழிவுகள் சேகரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை, நல்லூர் பிரதேச சபையினர் முன்னெடுத்துள்ளனர்.
இதற்கென, அரியாலை கிழக்குக் கடற்கரையை அண்டிய பகுதியில் காணியொன்றைக் கொள்வனவுச் செய்யவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சபைக்குட்பட்ட பிரதேசத்தில் அகற்றப்படும் திண்மக் கழிவுகள் யாவும், இவ்வாறு அமைக்கப்படவுள்ள திண்மக் கழிவுகள் சேகரிப்பு நிலையத்தில் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்படும். அத்துடன், உக்கக் கூடிய கழிவுகளைக் கொண்டு சேதனப் பசளைகளைத் தயாரிக்கவும் சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது, சபையால் அகற்றப்படும் திண்மக் கழிவுகள் யாவும், காக்கைத்தீவில் உள்ள திண்மக் கழிவுகள் சேகரிப்பு நிலையத்தில் கொட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
3 hours ago