2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அரிசியினை பொதி மாற்றிய இரண்டு வர்த்தகர்களுக்கு அபராதம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சிப்பகுதியில் காலாவதியான இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினை பொதி மாற்றிய இரண்டு வர்;த்தகர்களுக்கு 16 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட அரிசியை அழிக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா வியாழக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்;யப்பட்ட காலாவதியான அரிசியை மாற்றி பொதி செய்;த அரிசியாலை உரிமையாளர் மற்றும் வர்த்தகர் ஒருவரிடமிருந்தும் காலாவதியான 25 கிலோகிராம் எடை கொண்ட 152 பைகளை பாவனையாளர் அதிகாரசபையினர் மீட்டனர்.

அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதலாவது குற்றவாளிக்கு பத்தாயிரம் ரூபாயும் இரண்டாவது குற்றவாளிக்கு ஆறாயிரம் ரூபாயும் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் அரிசியினையும் அழிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X