2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

அறம் தோற்காது; கஞ்சி பரவட்டும்

Princiya Dixci   / 2022 மே 17 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

எப்பொழுதும் அறம் தோற்காது என்றும் சர்வதேச விசாரணைகளுக்கான கதவுகள் திறக்கப்படும் வரை தாயகத்தில் மட்டுமல்ல; புலம்பெயர் தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரவட்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (17) ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில்,

“இனப்படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் எவ்வாறு தமது “மற்சூ” என்ற உணவை இனப்படுகொலையின் அடையாளமாகக் கருத்துருவாக்கஞ் செய்து விடுதலை வேள்வியை முன்னெடுத்துத் தேச அங்கிகாரத்தைப் பெற்றார்களோ, அதேபோல் தமிழினமும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை இனப்படுகொலையின் குறியீடாகக் கடத்தி, விடுதலை வேள்வியைத் தொடர்வோம்.

“இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும்வரை, நம்பிக்கையோடு பயணிப்போம். விடுதலை வேள்வியில் காவியமான ஆத்மாக்களின் தூய்மையான இலட்சியம் நிறைவேறாமல் போகாது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X