2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அலைபேசி திருட்டு: இருவர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், கந்தர்மடம் – பலாலி வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்துக்குள் புகுந்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான அதிதிறன் அலைபேசிகளைத் திருடிச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அலைபேசி விற்பனை நிலையத்திலிருந்து திருடிய அலைபேசி ஒன்றில் சிம் அட்டையைப் பயன்படுத்தப்பட்டது.

அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப் பயன்படுத்துபவர் கண்டறியப்பட்டார். அவரை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் 19, 20 வயதுடையவர்கள். அவர்கள் கோப்பாயைச் சேர்ந்தவர்கள். சந்தேகநபர்களிடமிருந்து 10 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தர்மடம் - பலாலி வீதியின் ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள அலைபேசி விற்பனை நிலையத்துக்குள் கடந்த 31ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் கதவுடைத்து உட்புகுந்த திருடர்கள், விலை உயர்ந்த 18 அலைபேசிகளை திருடிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X