2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

ஆசிரியர்களுக்கான பயிற்சி செயலமர்வுகள்

Editorial   / 2018 மே 15 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உயர்தர கணக்கீட்டு ஆசிரியர்களுக்கும் ஆசிரிய சேவைக்கால ஆலோகசர்களுக்கும் பயிற்சி செயலமர்வுகள் இடம்பெறவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் கணக்கீட்டு பாடத்திட்டத்தின் செயற்திட்ட தலைவர் எஸ்.கே.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கணக்கீட்டு பாடத்தின் புதிய பாடத்திட்டம் தொடர்பாகவே இவ் செயலமர்வுகள் இடம்பெறவுள்ளதுடன் இச் செயலமர்வுகள் இம் மாதம் 21ஆம் 22ஆம் திகதிகளில் யாழ். மருதனார்மடத்திலுள்ள வடமாகாண கல்வி திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் இம்மாதம் 23ஆம் திகதி கா.பொ.தா சாதாரண தரத்தின் வணிகக் கல்வியும் கணக்கீடும் தொடர்பான செயலமர்வு வடமாகாண கல்வி திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களும் பங்குபற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .