2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டோர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டோர் இன்று முதல் சுழற்சிமுறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த உணவுத்தவிர்ப்பு போராட்டம் பல்கலைகழக முன்றலில் இடம்பெற்றுவருகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு, உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பெயர்ப் பட்டியலில் வேலை வாய்ப்புக்காக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் உயர்கல்வி அமைச்சில் பெயர்களை பதிவு செய்து தங்களது பெயர்கள் வராது பாதிக்கப்பட்டோர் தங்களது  கோரிக்கைகளை உயர் கல்வி அமைச்சோ,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ, யாழ் பல்கலைக்கழக நிர்வாகமோ, ஏற்று உரிய தீர்வகளை வழங்க முன்வவில்லை.

அத்துடன்,  தங்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளோ, அரசியல்வாதிகளோ அக்கறை காட்டவும் இல்லை என்பதால்,  பிரச்சினையை வெளிக்கொணரும் முகமாக, சுழற்சி முறையில் ஆரம்பித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .