Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மே 01 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
யாழ்.வலி,வடக்கு பிரதேச சபையினால் கழிவுகள் கொட்டப்படும் பகுதியில் ஆபத்தான மருத்துவ கழிவுகளும் கொட்டப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிரதேசசபை மற்றும் சுகாதாரத்துறைக்கு தொிந்தே இந்த விடயம் நடப்பதாகவும் சாடியுள்ள மக்கள் வலி,வடக்கு பிரதேசசபையின் எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகள் நல்லிணக்கபுரத்தை அண்மித்ததாகவுள்ள மண் அகழப்பட்ட குழிகளில் கொட்டப்படுகின்றது.
சாதாரண கழிவுகளுடன் வைத்தியசாலை கழிவுகள், மருத்துவ கழிவுகளும் கொட்டப்படும் நிலையில் அவற்றுள் வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், இரத்தம் ஏற்றப் பயன்படுத்தப்பட்ட குழாய்கள், சேலைன் போத்தல்கள் உள்ளிட்டவை வீசப்படுகின்றன.
தெல்லிப்பழையில் வைத்தியசாலை கழிவுகளை முகாமை செய்வதற்கான பொறிமுறை உள்ள நிலையில் பொறுப்பற்ற விதமாக மக்கள் குடிமனையை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு கொட்டப்பட்டுவது எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
மருத்துவக் கழிவுகளை அகற்றப்படுவதற்கு பிரத்தியேகமான பொறிமுறைகள் உள்ள நிலையில், கழிவுகளை முகாமை செய்யாமல் நிலத்தடி நீர்வளத்தை பாதிக்கும் வகையில் கொட்டும் பிரதேசசபை அதனுள் மருத்துவ கழிவுகளை கொட்டுவது எந்தவகையில் நியாயம் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பிரதேச சபை மற்றும் சுகாதாரத்துறை இந்த விடயத்தில் பொறுப்பற்று நடப்பதுடன் அவற்றை சுட்டிக்காட்டும் அதிகாரிகள் மீது பழிவாங்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதும் வழக்கமாகவே உள்ளது.
கடந்த வருடம் யாழ்.திருநெல்வேலி மற்றும் அரியாலை மயானம் ஆகியவற்றில் இவ்வாறு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
ஆகவே பொறுப்பு வாய்ந்தவர்கள் இனியாவது தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். (R)
20 minute ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
8 hours ago
9 hours ago
9 hours ago