2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆரோக்கியத்துக்கான நடைப்பயணம்

Niroshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட 35ஆவது மாணவர் அணி ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் 'ஆரோக்கியத்துக்கான நடைப்பயணம்' எனும் தொனிப்பொருளிலான ஊர்வலம், யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்றது.

தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட இந்த ஊர்வலம், வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் வரை சென்றது.

இதில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட 35ஆவது மாணவர் அணி, பொதுச்சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர்கள், சுகாதார திணைக்கள பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X