2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஆரோக்கிய மாதா தேவாலய மணி திருட்டு

Niroshini   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பலாலி ஆரோக்கிய மாதா தேவாலய மணி, இன்று  வியாழக்கிழமை திருட்டுப் போயுள்ளது.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மேற்படி ஆலயத்தின் பெருவிழாவுக்கு பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

கடந்த 26 வருடங்களின் பின்னர் மேற்படி ஆலயத்துக்கு பொதுமக்கள் மதவழிபாடுகளை மேற்கொள்ள படையினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் 2010 ஆம் ஆண்டு ஆலயத்தினை பார்வையிடுவதற்கும், பூஜை வழிபாடு ஒன்றினை மேற்கொள்ள வந்திருந்தபோது ஆலயத்தின் பெரிய மணி இருந்துள்ளது.

இன்று வியாழக்கிழமை (08) மீண்டும் வந்து பார்த்தபோது ஆலயத்தின் மணி களவாடப்பட்டுள்ளதாக பங்குத்தந்தை தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X