2025 மே 19, திங்கட்கிழமை

’ஆவா குழுவினர் முற்றாக கைதாகினர்’

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

 

வடக்கில் மிகவும் அச்சுறுத்தலாக காணப்பட்ட ஆவா குழுவை, தற்போது முற்றாக கைது செய்துவிட்டதாக, வடக்கு மாகாண சிரேஷ“ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்தார்.

காங்கேசன்துறையிலுள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரது அலுவலகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

வடக்கில் அச்சுறுத்தல் மிக்கதாக கடந்த காலங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த ஒரு சிலரைத் தவிர ஏனையோரை கைது செய்து, நீதிமன்றங்களில் முற்படுத்தியுள்ளதாகவும் ஆனால், அவர்களில் சிலர் நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட போதும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

இதேவேளை இன்னமும் கைது செய்யப்படாத நிலையில் மறைந்திருக்கும் ஆவா குழு உறுப்பினர்கள், பொலிஸ் நிலையங்களிலோ நீதிமன்றங்களிலோ வந்து சரணடைந்துவிடவேண்டும் என்றும் சரணடைவதன் மூலம், அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை முடிவுறுத்திக்கொள்ள முடியும் என்றும அவர் வேண்டுகோள் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X