2025 மே 01, வியாழக்கிழமை

'இந்திய மீனவர்களால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகளுக்கு நஷ்டஈடு’

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 01 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்ட விரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கும், உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் நஷ்டஈடுகளை வழங்குவதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் மருதங்கேணி பிரதேச செயலகத்தை வழி மறித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், குறித்த இடத்துக்க்ச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த தேவானந்தா, "உங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு - இந்தியக் கடற்றொழிலாளர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற விருப்பதுடன் உங்கள் முன்னால் வந்திருக்கின்றேன். என்னுடைய கருத்துக்களில் இருக்கின்ற உண்மையைப் புரிந்து கொண்டு அணி திரள்வீர்களாயின் உங்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றித் தருவேன்" என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .