2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் நிபந்தனை பிணை

Editorial   / 2024 நவம்பர் 08 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

எல்லை தாண்டி இலங்கை பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டருந்த 12 இந்திய மீனவர்களுக்கும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை எல்லை தாண்டி இந்தியா நாகை மாவட்ட மீடவர்கள் 12 பேரை ஒக்டோபர் 27ம் திகதி கடற்படையினர் ஒரு படகுடன் கைது செய்தனர்.

இந்திய மீனவர்கள் 12 பேரையும் பருத்தித்துறை பதில் நீதவான் பி.குமாரசுவாமி முன்னிலையில் கடந்த 27ம் திகதி நீரியல்வளத்துறை அதிகாரிகளால் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த பதில் நீதவான் 12 மீனவர்களையும் நவம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். 

இம் மீனவர்களை பருத்தித்துறை நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துறை முன்னிலையில் வௌ்ளிக்கிழமை (08)  முன்படுத்தப்பட்டனர்.

இந்திய மீனவர்களுக்கு எதிராக நீரியல்வளத்துறை அதிகாரிகளால் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் அனுமதியன்றி இல்ங்கை கடற்பரப்புக்கு எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமை மற்றும் தடைசெய்யப்பட்ட இழுவை மடியைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

படகை கடற்படையினர் தடுத்து நிறுத்தும் வரை படகின் வலைகளை தொடக்கறுத்து வைக்காமை அடங்கலாக படகோட்டிக்கு எதிராகவும் குற்றப் பத்திரம் தனியாக தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் ஒரு குற்றத்திற்கு ஆறு மாத சாதாரண சிறைத் தண்டணை என்ற அடிப்படையில் மூன்று குற்றங்களுக்குமாக 18 மாதகால சாதாரண சிறையை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து நிபந்தனையுடன் விடுவித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .