Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2019 மார்ச் 04 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்து குருக்கள் சபையின் தலைவர் சிவஸ்ரீ கே.வீ.கே.வைத்தீஸ்வரக் குருக்கள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (04) ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் வடமாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
மேலும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் கவனம் செலுத்திய ஆளுநர், அனைத்து மதங்களினுடைய பிரதிநிதிகள் குழுவொன்றை ஸ்தாபித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதனூடாக இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த குழுவில் இந்து மதத்தை சேர்ந்த மூன்று பேர், கத்தோலிக்க மதத்தை சேர்ந்த மூவர் (3), பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அரச அதிபர் சார்பில் ஒருவர் மற்றும் பொது அமைப்பை சேர்ந்த ஒருவர் உள்ளடங்கலாக மொத்தம் ஒன்பது பேர் கொண்ட குழு ஸ்தாபிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
44 minute ago
2 hours ago