2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவப் படகுகள் விவகார வழக்கு ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்பான வழக்குகள், பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரியொருவர் இன்று வியாழக்கிழமை (04) தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதா? அல்லது அரசுடமையாக்குவதா? என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முடிவு எடுக்கும் வரை மீனவர்களின் படகு தொடர்பான வழக்கு காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதிமன்றில் ஜந்து படகுகள் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிவான் ஏ.எம்.எம்.றியால்,  மீனவர்களின் படகு தொடர்பான வழக்கினை காலவரையறையின்றி ஒத்திவைத்தார்.

பருத்தித்துறை நீதிமன்றில் இந்திய மீனவர்களின் மூன்று படகுகள் தொடர்பான வழக்கு, புதன்கிழமை (03) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, மாவட்ட நீதிவான் பெருமாள் சிவகுமார், வழக்கினை காலவரையறையின்றி ஒத்திவைத்தார்.

தற்போது வடக்கு கடற்பரப்பில் 62 படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், படகு தொடர்பான வழக்குகள் ஊர்காவற்றுறை மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X