Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட இழுவைப் படகுகள் மூலம் தொழில் செய்யும் தமிழ்நாட்டு மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்தின் முன்பாக எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
வடமாகாண மீனவ கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில், வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம், வெள்ளிக்கிழமை (26) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் அண்மைய வருகையின் போது இருநாட்டு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாட, கடற்தொழில் அமைச்சருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று எதிர்வரும் 29ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் டில்லி செல்ல உள்ளதாக அறியக்கூடியதாகவுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் இருநாட்டு மீனவர்களும் சுமூகமாக தொழில் செய்வதற்கு பேச்சு வார்த்தை ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தேசிய மீனவ பேரவைத் தலைவர் மா.இலங்கோ, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜையும் ஏனைய முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்திப்பதற்கு தமிழகத்திலிருந்து டில்லி செல்கின்றார். கடற்தொழில் அமைச்சரின் விஜயத்துக்கு முன்னர் இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 27 பேரும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளதாக நம்பகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்தொழில் அமைச்சரின் இந்திய விஜயத்தின் நோக்கம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. அத்துமீறி வரும் தமிழக மீனவர் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு என்ன? வடபகுதி மீனவர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக அமைச்சர் கூறப்போகும் செய்தி என்ன? மீளவும் மீனவர் பேச்சுவார்த்தை என்ற பதத்தை பாவித்து இழுத்தடிக்கப் போகின்றனறா? அல்லது இந்திய மீனவ தலைவர்கள் கோருவது போல் 80 நாட்கள் எமது கடற்பரப்பில் தொழில் புரிய இடம் வழங்கப்போகின்றனரா? அல்லது எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் நடவடிக்கையை உடன்நிறுத்துமாறு கோரப் போகின்றனரா? என்பது மூடுமந்திரமாக உள்ளது.
முன்பிருந்த அமைச்சர்களைவிட தற்போதைய கடற்தொழில் அமைச்சர் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இழுவை மடிகளை பயன்படுத்துவதை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருவதை நாம் கண்டு வருகின்றோம். அவரின் வடமாகாண வருகையின் போது நேரடியாகவே அவதானிக்கப்பட்டது. இருந்தும் தமிழக மீனவர்கள் தங்கள் நியாயமற்ற கோரிக்கையை வலியுறுத்தி 29ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதுவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த உள்ளனர்.
இச்செயற்பாடுகளினால் எமது அமைச்சர் தன்நிலையிலிருந்து தளர்ந்து விடாதிருக்கவும் தமிழக மீனவர்களுக்கு வடபகுதி மீனவ நிலையை அழுத்தமாக தெரிவிக்கும் முகமாக அமைச்சரின் இந்திய விஜயத்தின் போது வடமாகாண மீனவர்களாகிய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவலகம் முன்பாக தமிழக மீனவர்களின் அத்துமீறிய வருகையை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க வடமாகாண கடற்தொழிலாளர்களின் இணையம் தீர்மானித்துள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago