2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இந்திய மீனவர்களை தடுத்தல் சட்டமூலம்:திருத்தங்களுடன் முன்னெடுக்க அங்கிகாரம்

Kanagaraj   / 2016 மே 04 , மு.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

வடபகுதிக் கடலில் இந்திய மீனவர்கள் ஊடுருவி மீன்பிடிப்பதைத் தடுப்பது தொடர்பான தனிநபர் சட்டமூலத்தை, திருத்தங்களுடன் முன்னெடுப்பதற்கு மாகாண சபைகள் அங்கிகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இந்த தனிநபர் சட்டமூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்; எம்.ஏ.சுமந்திரனால் 2016 பெப்ரவரி 10ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

தனிநபர் பிரேரணை குறித்து சபைக்கு அறிவிக்கும் போதே, மேற்கண்ட சட்டமூலம் தொடர்பில் சபாநாயகர் அறிவித்தார்.
இந்தச் சட்டமூலமானது, சகல மாகாண சபைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டதோடு சகல மாகாண சபைகளினதும் கருத்துக்கள், நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டன.

இதன்படி கிழக்கு, மேல், தென், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாண சபைகள், இந்தச் சட்டமூலத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. எனினும், வடமேல் மற்றும் வடமாகாண சபைகள், திருத்தங்களுடன் இதற்கு உடன்பட்டுள்ளன என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X