2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2016 நவம்பர் 28 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியலை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்குமாறு, ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன், திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார்.

தமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியில் இருந்து ஒரு விசைப்படகுடன் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து, நெடுந்தீவுக்கு தென்மேற்கே 6 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் நால்வரை, கடற்படையினர் இம் மாதம் 1 ஆம் திகதி கைது செய்திருந்தனர்.

கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் குறித்த மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, மீனவர்களின் விளக்கமறியலை மீண்டும் 14 நாட்கள் நீடித்து ஊர்காவற்துறை பதில் நீதிவான்  உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X