2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இந்திய றோலர்களின் வருகை தற்போது குறைவு

Niroshini   / 2016 ஜனவரி 27 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவில், இந்திய றோலர்களின் வருகை தற்போது குறைவடைந்துள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடலில் பிறமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொழிலில் ஈடுபடுகின்றபோது, அதனைக் கட்டுப்படுத்துவதில் நெருக்கடியுள்ளதாகவும் தமது திணைக்களத்துக்கு ஆளணி நெருக்கடி காணப்படுவதாகவும் இதன் காரணமாக, நாயாறு போன்ற பகுதிகளில் நடைபெறுகின்ற சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்துவதில் இடர்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X