2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இந்திய வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்கமாற்றுத் திட்டம் தேவை: டக்ளஸ்

Gavitha   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இந்திய அரசாங்கம், எமது மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தர முன்வந்திருந்த நிலையில், 2010ஆம் வருடம், இத்திட்டத்தின் அடிப்படையிலான ஒரு வீட்டுக்குத் தலா 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டது.

தற்போது 7 வருடங்கள் கழிந்துள்ள நிலையில், அத்தொகையில் வீடு கட்ட இயலாதுள்ளதன் காரணமாக, இத்திட்டத்தின் எஞ்சியுள்ள வீடுகளை அமைக்க மாற்றுத் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டியுள்ளது' என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், '2010ஆம் வருடம், முன்னாள் ஜனாதிபதியுடன் நான் இந்தியா சென்றிருந்தபோது இவ்வீட்டுத் திட்டம் தொடர்பிலான கோரிக்கைளை முன்வைத்திருந்தேன். அதன்போது, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் அமைச்சர்களான ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோனி, எஸ்.எம்.கிருஸ்ணா உட்பட்வர்கள் உடனிருந்து, இத்திட்டத்துக்கு உடன்பட்டு நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டது' என்றார்.
'இத்திட்டம் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வந்து, பல்வேறு காரணங்களால் தாமதமடைந்திருக்கும் நிலையில், தற்போது இத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை அமைக்க அந்த நிதி போதாது என்பதால், அதனை அதிகரித்து, மேற்படி வீடுகளை எமது மக்கள் பெற மாற்றுத் திட்டமொன்று அவசியமாக உள்ளது என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளேன்' என்று அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X