2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இராணுவத்தினரால் சேதமாக்கப்பட்ட கோவில்கள் புனரமைப்பு

Editorial   / 2018 மே 07 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

யாழ். மாவட்டத்தில், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், குறிப்பாக கடந்த மூன்று வருடகாலப் பகுதியில், இராணுவத்தினரின் நடவடிக்கைகளால், பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ கோவில்கள் ஏதேனும் சேதமடைந்திருந்தால், அவற்றை இராணுவத்தின் முழுமையான செலவில் புனரமைத்துத் தருவதாக, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

மேலும், யாழ். மாவட்டத்தில், போதிய வசதியற்ற மற்றும் வருமானம் குறைந்த கோவில்களின் புனர்நிர்மாண வேலைதிட்டத்தின் கீழ், மணல் மற்றும் சீமெந்து உதவிகோரிய ஆலயங்களுக்கு, அடுத்த வாரம் முதல் அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உதவி கோரிய கோவில்களின் தலைவர்கள், நிர்வாகச் சபை உறுப்பினர்களுக்கும் யாழ். கட்டளைத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று, யாழ். படைத் தலைமையகத்தில், நேற்று  (06) இடம்பெற்றது. இதன்போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .