2025 மே 16, வெள்ளிக்கிழமை

இரும்பக உரிமையாளர் கொலை: இளைஞன் விடுதலை

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என் ராஜ், எம்.றொசாந்த்

கோண்டாவில் - உப்புமடச் சந்தி இரும்பக  உரிமையாளரைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு  48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட இளைஞன் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டார்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தடுப்புக்காவல் உத்தரவில் தடுத்துவைக்கப்பட்ட இளைஞனையும் மற்றொரு இளைஞனையும் பொலிஸார் மன்றில் முற்படுத்தினர்.

வழக்கை ஆராய்ந்த நீதவான் காயத்திரி சைலவன், முதலாவது சந்தேகநபரை வழக்கிலிருந்து விடுவித்து, விடுதலை செய்யததுடன், இரண்டாவது சந்தேகநபரை வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .