2025 மே 17, சனிக்கிழமை

இரும்பக உரிமையாளர் மீது தாக்குதல்

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

இரும்பக உரிமையாளர் மீது வாள்வெட்டுக் குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள இரும்பகத்திற்குள் இன்று (6) மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று உரிமையாளருடன் தகராற்றில் ஈடுபட்டு, அவரை இரும்பகத்தில் இருந்த கொட்டனால் தாக்கியுள்ளார்கள்.

தாக்குதலில் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சி.சி.ரி.வி காணொளி மூலம் தாக்கியவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றானர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .