2025 மே 05, திங்கட்கிழமை

இருளில் மூழ்கும் வவுனியா பழைய பஸ் நிலையம்

Editorial   / 2020 நவம்பர் 29 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா பழைய பஸ் நிலையம் கடந்த சில தினங்களாக இருளில் மூழ்கி வருகின்றது. இதனால் பஸ் நிலையத்தைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்களும் இருளில் மூழ்கியுள்ளன. 

மின்சார சபைக்குச் செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் செலுத்தப்படாமையால் மின்துண்டிப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், மின்மானியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்மாற்றியும் சேதமடைந்துள்ளமையால் இந்த பஸ் நிலையத்துக்க்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீமைத்துத்தருமாறு அப்பகுதி வர்த்தகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

தற்போது காணப்படும் மழையுடனான வானிலையால் நேர காலத்துக்குள் இருள் சூழ்ந்து கொள்வதாதால் இரவு வேளையில் வர்த்தக நிலையங்களைத் திறந்து வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே, இந்நிலையை உடனடியாக சீரமைத்துத்தருமாறு பழைய பஸ் நிலையத்திலுள்ள வர்த்தகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X