2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இராணுவ குடியிருப்பு தொடர்பில் போதிய விளக்கம் இல்லை

Menaka Mookandi   / 2016 மார்ச் 24 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வவுனியாவில் அமைக்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் இராணுவக் குடியிருப்பு தொடர்பில் போதிய விளக்கம் இல்லாத நிலைமை வடமாகாண சபையில் காணப்பட்டது.

வவுனியாவில் இராணுவத்தினருக்கு குடியிருப்பு வீடுகள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (24) ஆர்ப்பாட்டம் ஒன்று வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஜனாதிபதி இந்தக் குடியிருப்புக்களை திறக்கக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், சபையில் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கருத்துத் தெரிவிக்கும் போது, இந்த விடயம் தொடர்பில் வடமாகாண சபைக்கு குழப்பம் இருக்கின்றமை தெளிவாகியது.

'வவுனியா தெற்கில் சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தில், இராணுவத்திலுள்ளவர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றதாகவும், வெளியிடங்களைச் சேர்ந்த குடும்பங்கள் கொண்டு வரப்பட்டு குடியேற்றம் செய்யப்படவில்லையென தனக்கு வவுனியா தெற்கு பிரதேச செயலரிடம் கூறியதாக' சத்தியலிங்கம் கூறினார்.

இருந்தும், இதன் உண்மைத் தன்மை தொடர்பில் தனக்கு உறுதிபடக்கூற முடியாது என்று இது தொடர்பில் தான் பிரதேச செயலகத்திடம் அறிக்கை கோரியுள்ளதாகவும், அதன் பின்னரே முடிவு சொல்ல முடியும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X