Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
George / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
சாவகச்சேரி லயன்ஸ் கழகமும் மானிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலையும் இணைந்து நடாத்தும் இலவச மருத்துவ முகாம், ஞாயிற்றுக்கிழமை (20) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலை மண்டபத்தில் சாவகச்சேரி லயன்ஸ் கழகத் தலைவர் பு.தினேஷ்குமார் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த மருத்துவ முகாமில் கண், நீரிழிவு, பொது மருத்துவம் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் நடைபெறும்.
கண் பரிசோதனை மூலம் பார்வைக் குறைபாடு இனங்காணப்படுமிடத்து இலவச மூக்குக் கண்ணாடி வழங்கப்படவுள்ளதுடன் கண் விழிவெண்படலத்தில் பூப்படர்வு ஏற்பட்டவர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான இலவச கண் வில்லைகளும் வழங்கப்படும்.
இந்த மருத்துவ முகாமில் நோயாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு இலவச மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நடாத்தும் மாபெரும் குருதிக் கொடை முகாமும் இதன்போது நடைபெறும். இந்தக் குருதிக் கொடை முகாமில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்க முடியுமென இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி ம.பிரதீபன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
20 minute ago