2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

இலவச மூக்குக்கண்ணாடி வழங்கி வைப்பு

Administrator   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் யாழ்.மாவட்ட சம்மேளனம், சாவகச்சேரி சிட்டி லயன்ஸ் கழகம் மற்றும் தேசோதய சபை ஆகியன இணைந்து, பார்வைக்குறைபாடுடையவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைத்தன.

இந்நிகழ்வு, யாழ்ப்பாணம் ஒஸ்மானியக் கல்லூரியில் திங்கட்கிழமை (21) நடைபெற்றது.

ஒஸ்மானியக் கல்லூரியின் அதிபர் எம்.அஷ்ரப், கொட்டடி சனசமூக நிலைய தலைவர் கலாநிதி ஞா.தனேந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து வறிய மக்களுக்கு கண் சத்திரசிகிச்சைகளுக்கான உதவிகளும் செய்யப்படும் என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X